
நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 வது பொதுக்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் சங்கத் தேர்தல்லி நாங்கள் அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நடிகர் சங்கக் கட்டடம் கட்ட பொதுக்குழுவில் ஒப்புதல் கொடுத்துள்ளார்கள்.
நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தின் அடுத்த பொதுக்குழு புதிய கட்டடத்தில் நடைபெறும். நடிகர் சங்க கட்டடம் கட்ட சட்டரீதியாக எந்தத் ததையும் இல்லை. நடிகர் சங்கக் கட்டடம் கட்ட வங்கியில்தான் கடன் பெறவுள்ளோம்.
கட்டடம் கட்ட பெரிய நடிகர்களிடம் நிதி கேட்க முடிவு செய்துள்ளோம். அடுத்த ஓராண்டுக்குள் கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G