ஏ.ஆர்.ரஹ்மான் தூய்மையான இனிய மனிதர்: இயக்குநர் பார்த்திபன் ஆதரவு! 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபன் ஆதரவு தெரிவித்துள்ளார். 
ஏ.ஆர்.ரஹ்மான் தூய்மையான இனிய மனிதர்: இயக்குநர் பார்த்திபன் ஆதரவு! 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மக்கள் திணறியது இணையத்தில் கடந்த இரண்டு நாள்களாக பேசு பொருளாகியுள்ளது. 

இந்த சம்பவத்துக்கு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ மன்னிப்பு கேட்டதுடன், நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்கள் டிக்கெட் நகலை பதிவிடுங்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மானும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே பல்வேறு தரப்பினர் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, சில ரசிகர்கள் டிவிட்டரில், ‘இது அப்பட்டமான பண மோசடி, இதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் துணையாக இருந்துள்ளார்’ எனக் கடுமையாக பதிவிட்டு வந்தனர். 

யுவன் சங்கர் ராஜா ஆதர்வு தெரிவித்த் நிலையில் தற்போது இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 

‘மறக்குமா நெஞ்சம்’ மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் வருத்தத்திற்குரியது. நடத்தியவர்களின் பொறுப்பு அது. திரு ஏஆர் ரஹ்மான் தூய்மையான இனிய மனிதர். அவரே மனம் மிக வருந்தி பொறுப்பை தானும் ஏற்றுக் கொள்வதாக முன் வந்திருக்கிறார். அவரின் மென்மையான மனமும் மேன்மையான குணமும் எனக்குத் தெரியும்! என்னுடைய புதிய படத்திற்கு அவர் இசையமைக்கவில்லையேத் தவிர, கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் படபிடிப்பு நடந்த போது அவரது மேனேஜர் திரு சுகந்தனை அழைத்து, “நான் பெரிதும் மதிக்கும் மிக சிறந்த கிரியேட்டர் பார்த்திபன், அவரின் மனம் நோகாமலும் முகம் சுளிக்காமலும் நடந்துக் கொள்ளுங்கள்”எனக் கூறியதாக ராஜ உபச்சாரம் எனக்கு. தான் சம்மந்தப்படாத விஷயத்தில் கூட மற்றவர் மனம் நோகாதிருக்க நினைப்பவர், தான் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாத்த்திற்காக மனம் உடைந்திருப்பார். இனி இன்னும் கவனம் கொள்வார். அவருக்கு நான் மட்டுமல்ல இந்தத் திரையுலகமே துணை நிற்கும். அவரின் இசையை தொடர்ந்துக் கொண்டாடுவோம். பாசிட்டிவிட்டியை பரப்புவோம் எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com