இந்தியன் - 2க்குப் பிறகு கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது.
இதற்காக, கமல் - வினோத் கூட்டணியில் உருவாகும் கமல் 233 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நெஷனல் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
‘ரைஸ் டூ ரூல்’(rise to rule) என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள காட்சிகள் இது அரசியல் படமென்பதைக் உறுதிசெய்கின்றன. முன்னதாக, விவசாய சங்க நிர்வாகிகளுடன் கமல் மற்றும் வினோத் ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் வெளியானதால் இப்படம் விவசாயிகளின் பிரச்னையைக் கொண்டு உருவாக இருக்கிறது என தகவல் பரவியது.
இதையும் படிக்க: அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படங்கள்!
கமல்ஹாசன் இதற்காக துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாத துவக்கத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கமல் - 233 படம் ராணுவ பின்னணியில் உருவாக உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதில், கமல்ஹாசன் முன்னாள் ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்!