மிருகம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சோனா. அதன்பின், குசேலன், குரு என் ஆளு உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், சினிமாவில் தன்னை பலரும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளதைக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்.
இதையும் படிக்க: ரூ.50 கோடி வசூலித்த ஆர்டிஎக்ஸ்!
இந்நிலையில், இவர் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் ஒரு பகுதியை இணையத் தொடராக எடுக்க திட்டமிட்டுள்ளார். இதை அவரே இயக்கவும் இருக்கிறார். பிரபல ஓடிடிக்காக தயாராகும் இத்தொடரின் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.