Enable Javscript for better performance
பாலியல் ரீதியான கிண்டல்.. சர்ச்சையில் பிரபல நடிகர்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பாலியல் ரீதியான கிண்டல்.. சர்ச்சையில் பிரபல நடிகர்!

    By DIN  |   Published On : 15th September 2023 08:23 PM  |   Last Updated : 15th September 2023 08:28 PM  |  அ+அ அ-  |  

    Screenshot_2023-09-15_202119

     

    மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அலென்சியர் லே லோபஸ். தொண்டிமுதலும் த்ரிஷாக்சியும், மகேஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

    அப்பன் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது. இப்படத்திற்காக, கேரள அரசின் மாநில திரைப்பட விருதும் அறிவிக்கப்பட்டது.

    Malayalam Actor Alencier's Sexist Remark Over Female Sculpture As Award:  'Don't Tempt Us' (WATCH)

    இந்நிலையில், நேற்று(வியாழக்கிழமை) திருவனந்தபுரத்தில் கேரள அரசின் மாநில திரைப்பட விருது வழங்கும் விழா, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. 

    அப்போது, நடுவர்களின் சிறப்பு பரிந்துரையின் பேரில் நடிகர் அலென்சியர் லே லோபஸ், பினராயி விஜயனிடமிருந்து   விருதையும் (பெண் சிலை) சான்றிதழையும்  பெற்றுக்கொண்டார்.

    இதையும் படிக்க: கூறியது நடந்துவிட்டது... உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!

    பின், விருது குறித்துப் பேசியபோது, “பெண் சிலைகளைக் கொடுத்து எங்கள் உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டாம். நான் எந்த பெண் சிலையைப் பார்த்தும் மயங்குவதில்லை” எனக் கிண்டலாகக் கூறினார்.

    Dr.Sebastian Joseph Received the Kerala State Film Award | UC College Aluva
    கேரள அரசால் வழங்கப்பட்ட பெண் சிலை!

    இந்நிலையில், சமூக வலைதளங்களில் அலென்சியரின் பேச்சு வைரலானதைத் தொடர்ந்து,  “மாநில அரசால் தரப்படும் விருதை பாலியல் ரீதியாக கிண்டலடிப்பது எந்த விதத்திலும் சரியல்ல. இது அரசு கொடுக்கிற கௌரவத்தை அவமரியாதை செய்வதுபோல் உள்ளது” என அவர் மீது ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனால், கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அலென்சியர்!

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp