ஓடிடியில் வெளியான ஹன்சிகாவின் மை 3 வெப் தொடர்!

சாந்தனு - ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மை 3 வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஓடிடியில் வெளியான ஹன்சிகாவின் மை 3 வெப் தொடர்!

சாந்தனு - ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மை 3 வெப் தொடர் வெளியாகியுள்ளது.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குநர் எம்.ராஜேஷ். இவர் புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார்.

இந்த வெப் தொடரில் சாந்தனு, ஹன்சிகா, ஜனனி, முகின் ராவ், அஷ்னா ஜவேரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் விதத்தில் இந்தத் தொடர் உருவாகியுள்ளது. 

இந்த நிலையில், மை 3 வெப் தொடர் இன்று (செப்டம்பர் 15) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com