மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஓசிடி எனும் மன நோய் உள்ளது: விஷால்! 

மார்க் ஆண்டனி பட நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஓசிடி எனும் மனநோய் உள்ளதாக விஷால் கூறியுள்ளார். 

News image
Updated On :18 செப்டம்பர் 2023, 5:48 pm IST

இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முழுநேரம் நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகன் மற்றும் முக்கியமான படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்ஜர் படத்தில் பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்துள்ளார். 

2021இல் சிம்புவுடன் நடித்து வெளியான மாநாடு திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. 

செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதில் எஸ்.ஜே. சூர்யா 5 குரல் மாற்றங்களில் பேசியிருப்பார். அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரம் பல்வேறு காலகட்டங்களில் வருவதற்கு ஏற்ப பேசி அசத்தியிருப்பார். 

Story image

இந்நிலையில் விஷால் நேர்காணல் ஒன்றில், “நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஓசிடி பிரச்னை உள்ளது. ஒருமுறை காட்சிக்காக மது அருந்த பயன்படுத்திய கிளாஸ் கழுவி விட்டதா என உதவியாளரிடம் கேட்க அவரோ புதியது என்பார். அது  கழுவப்பட்டதா இல்லையென்று கேள்விகள் கேட்டு தொல்லை செய்தார். பின்னர் அவர் கண் முன்பாகவே கழுவப்பட்டது. இன்னொருநாள் படப்பிடிப்பில் அவர் அணிந்திருந்த கூலிங் கிளாஸ் உதவியாளர் ஒருவர் பயன்படுத்தியது என்று வேண்டுமென்றே பொய் சொல்லிவிட்டேன். உடனே உதவியாளர்களை அழைத்து மிகவும் கோபமடைந்து விட்டார். பின்னர் இயக்குநரும் நானும் பொறுமையாக விளக்கினோம். பின்பு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு நடித்தார்” எனக் கூறினார். 

ஏற்கனவே பொம்மை பட நிகழ்ச்சியொன்றிலும் எஸ்.ஜே. சூர்யா தனக்கு ஓசிடி பிரச்னை இருப்பது நண்பர்களுக்கு தெரியும் எனக் கூறியிருப்பார். 

ஓசிடி என்பது அப்சஸிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர்.  மனதை ஆட்டிப்படைக்கும் ஒரு வகையான நரம்பியல் குறைபாடே ஓசிடி. மூளையில் இருக்கும் செரட்டோனின் என்னும் வேதிப்பொருள் பற்றாக்குறையால் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது. இதில் பல வகைகள் இருக்கின்றன. எஸ்.ஜே.சூர்யாவிற்கு இருப்பது தூய்மை குறித்தான பயம். பொருள்களை அதிகம் முறை கழுவிக்கொண்டே இருப்பார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.