
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்பின், டப்பிங் மேற்கொள்ளபட உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார். இப்படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க: விஜய்யும் ஷாருக்கானும் இணைந்து நடிக்க விரும்புகிறார்கள்: அட்லி
இந்நிலையில், சமீபத்தில் சைமா விருது விழா துபையில் நடைபெற்றது. அதில், விக்ரம் படத்திற்காக கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் விருது பெற சென்றிருந்தனர். விருது விழாவில் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் தோற்றத்தில் வந்திருந்தார். இதனால், லியோ படத்தில் கமல் நடித்திருக்கக் கூடும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.