முன்னணி தெலுங்கு நடிகரும் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யாவின் 23வது படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தினை சந்தோ மோன்டெடி இயக்க உள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதலில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக இருந்த இந்த கதாபாத்திரத்தில் தற்போது சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இயக்குநர் ஏற்கனவே 2018இல் நாக சைதன்யாவுடன் சாவ்யாச்சி எனும் படத்தினை இயக்கியுள்ளார். தெலுங்கு பிரேமம் எடுத்தவரும் இவர்தான்.
இந்தப் படம் மீனவர்கள் பற்றிய படமாக இருக்குமெனவும் அதற்காக நாக சைதன்யா ஸ்ரீகாகுளம் பகுதியில் மீனவ சமூகத்தினரை சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: அணியில் தேர்வாகாதது குறித்து சஞ்சு சாம்சனின் வைரலாகும் பதிவு!
நாக சைதன்யாவின் 22வது படம் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி மோசமான விமர்சனங்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 24வது படம் குஷி படம் இயக்குநருடன் அமையவிருக்கிறது.
சாய் பல்லவி தற்போது சிவ கார்த்திகேயனின் 21வது படத்தில் நடித்து வருகிறார். சாய்பல்லவி, நாக சைதன்யாவுடன் ஏற்கனவே ‘லவ் ஸ்டோரி’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
படக்குழு வெளியிட்ட விடியோவில் முகம் காண்பிக்காமல் இருப்பது சாய்பல்லவிதானென ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.