அணியில் தேர்வாகாதது குறித்து சஞ்சு சாம்சனின் வைரலாகும் பதிவு!
By DIN | Published On : 19th September 2023 03:36 PM | Last Updated : 19th September 2023 04:15 PM | அ+அ அ- |

படம்: இன்ஸ்டாகிராம் | சஞ்சு சாம்சன்
13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 390 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.71 என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பை, உலகக் கோப்பை, ஆசிய போட்டிகள் என எதிலும் சஞ்சு சாம்சன் தேர்வாகவில்லை.
உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அதற்கான அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
முதலிரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுல் தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது. 3வது போட்டியில் ரோஹித் தலைமையில் களமிறங்குகிறது. இதில் எந்த அணியிலும் சஞ்சு சாம்சன் தேர்வாகவில்லை.
இதையும் படிக்க: முதலிடத்துக்கு போட்டியிடும் இந்தியா- ஆஸ்திரேலியா!
ஐது குறித்து தனது முகநூல் பக்கத்தில் சஞ்சு சாம்சன் சோகம் கலந்த சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படிக்க: விராட் கோலி போல பாவனை செய்த இஷான் கிஷன்: வைரல் விடியோ!
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாம்சன், “இதுதான் நான். இங்கிருந்து நான் முன்னேற நினைக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். அதில் தான் பேட்டிங் விளையாடும் புகைப்படத்தினையும் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், “நான் சஞ்சு சாம்சன் நிலையில் இருந்தால் நிச்சயமாக ஏமாற்றமடைந்திருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார். பலரும் சாம்சனுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
If I’m in place of @IamSanjuSamson right now I will be very disappointed…
— Irfan Pathan (@IrfanPathan) September 18, 2023