ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு! 

ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய  அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு! 

உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவுடன் ஆஸி. அணி ஒருநாள் தொடரில் மோதுகிறது. இதில் ஆஸி.வின் முக்கியமான வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளார்கள். காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் முக்கிய வீரர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

18 பேர் கொண்ட ஆஸி. அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்பாட், அலெக்ஸ் கைரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஸ் ஹேசல்வுட், ஜோஸ் இங்கிலிஸ், மாட் ஷார்ட், ஸ்பென்செர் ஜான்ஸன், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா. 

முதலிரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி : கே.எல்.ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணைக் கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ஸ்ரேயஷ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர், ஆர் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா,முகமது ஷமி, முகமது சிராஜ்,பிரசித் கிருஷ்ணா. 

3வது போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹார்திக் பாண்டியா (துணைக் கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி,  ஸ்ரேயஷ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஆர் அஸ்வின், அக்‌ஷர் படேல்*. 

அக்‌ஷர் படேல் - அப்போதைய  உடல்நிலை தகுதி பொறுத்து பங்கேற்பார். 

செப்.22, செப்.24, செப்.27 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com