
ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான அடியே படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டம் இரண்டு படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அடியே. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக கெளரி கிஷன் நடித்துள்ளார்.
மேலும், இயக்குநர் வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் ஆக.25-ல் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக படக்குழு அறிவித்தது.
இதையும் படிக்க: அஜித்துக்கு வில்லனாகும் ஆரவ்?
இந்த நிலையில், அடியே திரைப்படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Destiny has its own plans, join us in the parallel universe of Adiyae, the quirky rom-com Streaming exclusively on Sony LIV from September 29th. #SonyLIV #AdiyaeOnSonyLIV @gvprakash @Gourayy @vp_offl @vikikarthick88 @justin_tunes @RJVijayOfficial @thinkmusicindia pic.twitter.com/AbteQKREAy
— Sony LIV (@SonyLIV) September 19, 2023
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...