
நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
படத்தின் ஆரம்பத்தில் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்திருந்தார்கள். படத்தில் அஜித் பற்றியும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதையும் படிக்க: மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகும் கேப்டன் மில்லர்!
இந்நிலையில், இப்படம் வெளியான 5 நாள்களில் உலகளவில் ரூ.62.11 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வார இறுதியில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மார்க் ஆண்டனி ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.
#MarkAntony 4th & 5th day gross
— Vinod Kumar (@vinod_offl) September 20, 2023
TN : 7.61 cr & 4.09 cr
Kerala : 60 lakhs 45 lakhs
Karnataka 76 lakhs 68 lakhs
Ap & Telangana 5 days
6.3 Crores
Overseas 5 days Gross
11.1 cr
Over all Word wide : 5 Days
62.11 cr
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...