மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மீது வழக்குப் பதிவு 

ஏ.ஆா்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மீது கானத்தூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மீது வழக்குப் பதிவு 

ஏ.ஆா்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மீது கானத்தூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசை அமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் ஒரே நேரத்தில் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலா் நுழைவுச்சீட்டு இருந்தும் நிகழ்ச்சியை காண முடியாமல் திரும்பினா்.

இதற்கு, நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி ஈவெண்ட்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்து, நிகழ்ச்சியை காணாதவா்களுக்கு நுழைவுக் கட்டணத்தைத் திருப்பி அளித்தது. இந்த நிலையில் ஏ.ஆா்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மீது கானத்தூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் ஏசிடிசி நிறுவனம் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com