இளையராஜா இசையில் மார்கழி திங்கள் படத்தின் உன் நினைவால் பாடல் வெளியீடு

இளையராஜா இசையில் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தில் இருந்து உன் நினைவால் என்கிற விடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.  
இளையராஜா இசையில் மார்கழி திங்கள் படத்தின் உன் நினைவால் பாடல் வெளியீடு

இளையராஜா இசையில் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தில் இருந்து உன் நினைவால் என்கிற விடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

‘மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருப்பவர் மனோஜ் பாரதிராஜா. இந்த படத்தில் அவரது தந்தையும் இயக்குநருமான பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் படத்தில் ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

படத்தை இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 5-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ஏற்கெனவே படத்தின் டிரைலர் வெளியான நிலையில் உன் நினைவால் என்கிற விடியோ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com