
வருண் தவானுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆட்டோவில் செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது என்ன மாயம் படத்தில் நாயகியாக அறிமுகமான கீர்த்திக்கு பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது ரஜினி முருகன் திரைப்படம். அதன்பின், தொடரி, ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.
சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். மாமன்னன் வெற்றிப்படமாக அமைந்ததால் தன்னுடைய சம்பளத்தை கீர்த்தி சுரேஷ் உயர்த்தியதாக கூறப்படுகிறது.
தற்போது, அட்லி இயக்கத்தில் வருண் தவானுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: முக்கிய தொடரில் நுழையும் காற்றுக்கென்ன வேலி கதாநாயகன்!
இந்த நிலையில், வருண் தவானும், கீர்த்தி சுரேஷும் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆட்டோவில் செல்வதாக தெரிகிறது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
@KeerthyOfficial @Varun_dvn #KeerthySuresh #VarunDhawan pic.twitter.com/XB3qJ0PP93
— Trends Keerthy (@TrendsKeerthy) September 22, 2023
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...