செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

மூத்த நடிகர் மதுவின் 90வது பிறந்தநாள்: சினிமா பிரபலங்கள் வாழ்த்து! 

லெஜெண்டரி நடிகர் மாதவன் நாயர் எனும் மதுவின் 90வது பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Published On :

நடிகர் மாதவன் நாயர் எனும் மது 1970இல் ப்ரியா எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 59 வருடங்களாக நடித்து வருகிறார். மலையாளம், தமிழ், ஹிந்தி சினிமாக்கள் உள்பட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 12 படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர், நடிகராக மட்டுமல்லாமல் 15 படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். 

அவரது 400வது படமாக 2019இல் துல்கர் சல்மான் படத்தில் நடித்திருந்தார். கேரள அரசின் விருதுகள், தேசிய விருதுகள் உள்பட பல விருதுகளை வென்றுள்ளார். 2013இல் பத்ம ஸ்ரீ விருதும் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Story image

அவர் இயக்கிய செம்மீன் திரைப்படத்துக்காக குடியரசு தலைவரிடம் தங்கப் பதக்கம் பெற்றார். அவரது பங்களிப்பு மலையாள சினிமாவுக்கு மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே ஈடு இணையற்றதென சினிமா விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள். 

Story image

நடிகர் மோகன்லால் 2022இல் தந்தையர் தின விழா வாழ்த்து தெரிவித்திருந்தார். பல படங்களில் எனக்கு தந்தையாகவும் ரோல் மாடலாகவும் இருந்தவர் மது சார் எனக் குறிப்பிட்டு இருந்தார். 

தமிழில் பாரத விலாஸ், தர்மதுரை, ஒரு பொண்ணு ஒரு பையன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

Story image

இந்நிலையில் மூத்த நடிகர் மதுவின் 90வது பிறந்தநாளுக்கு மோகன்லால் தனது பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவருடன் நடிகர் மம்மூட்டியும், “என்னுடைய சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து” எனப் பதிவிட்டுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.