
தமிழ் தொலைக்காட்சிகளில் மறுஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன. இவை முதல்முறை ஒளிபரப்பானபோதும் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன.
தொலைக்காட்சி தொடர்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதற்கு அவை ஆயிரம் எபிஸோடுகளைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகியும் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்படுவதே சிறந்த உதாரணம். அந்தவகையில், கோலங்கள், நாதஸ்வரம், தெய்வமகள், தென்றல், அழகி ஆகிய தொடர்கள் தொலைக்காட்சிகளில் மறுஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இவை 10 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியவை. அப்போது ஒளிபரப்பாகும்போது மக்களிடம் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றன.
அதிக நபர்களை சீரியல் பார்க்க வைத்த பெருமை இந்தத் தொடர்களுக்கும் சேரும். குறிப்பாக கோலங்கள், தெய்வமகள், தென்றல் ஆகிய தொடர்கள் ஜனரஞ்சகமாக அனைத்துத்தரப்பு ரசிகர்களையும் சென்று சேர்ந்தது.
தற்போது அவை மறுஒளிபரப்பு செய்யப்படுகின்றன. முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில், தற்போது கலைஞர் மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சியில் அவை மறுஒளிபரப்பாகின்றன.
இதில், திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் தொடர் அதிக அளவாக 1.12 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடர் 0.54 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.
வி.சி. ரவி இயக்கிய அழகி தொடர் - 0.47 டிஆர்பி புள்ளிகள்
எஸ். குமரன் இயக்கிய தெய்வமகள் - 0.23 டிஆர்பி புள்ளிகள்
எஸ். குமரன் இயக்கிய தென்றல் தொடர் - 0.43 டிஆர்பி புள்ளிகள்
இதற்கு முன்பு மெட்டி ஒலி, ஆனந்தம் தொடர்களும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.