புதிய அத்தியாயம் தொடக்கம்! வாழ்த்து மழையில் அன்பே வா நடிகை!

அன்பே வா தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நடிகை டெல்னா டேவிஸ். இவர் நேற்று தனது 28வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். 

அவருக்கு சின்னத்திரையைச் சேர்ந்த நடிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், அவரின் நண்பர்கள் சேர்ந்து டெல்னாவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர். 

திறந்தவெளி பூங்காவில் பிறந்தநாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அவர்கள், வண்ணமயமான விளக்குகள் மற்றும் டெல்னாவின் புகைப்படங்களைக் கொண்டு அலங்கரித்திருந்தனர். 

அதில் கேக் வெட்டிய நடிகை டெல்னா டேவிஸ், மற்றொரு ஆண்டு என் பயணத்தில் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இது தொடர்பான விடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ள டெல்னா டேவிஸ், மிகவும் வலிமையான மனதுடன் அதிரடி நிறைந்த வாழ்க்கைய ஆரத்தழுவ தயாராகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த சிறப்பு வாய்ந்த நாளில் இன்னொரு அத்தியாயத்தின் தொடக்கத்தை கொண்டாடுகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com