லியோவுக்கு இடையூறாக இருந்தாரா உதயநிதி? தயாரிப்பாளர் விளக்கம்

லியோ இசைவெளியீட்டு நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தடுக்க நினைக்கிறார் என்ற செய்திக்கு தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.
லியோவுக்கு இடையூறாக இருந்தாரா உதயநிதி? தயாரிப்பாளர் விளக்கம்
Published on
Updated on
1 min read

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.  

இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார்.  இப்படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது. 

படம் வெளியாகும் வரை லியோ அப்டேட் இருக்குமென விருது விழா ஒன்றில் லோகேஷ் கூறினார். அதன்படி, லியோ தெலுங்கு, கன்னட, தமிழ்ப் போஸ்டர்கள் வெளியானது.

இறுதியாக, இப்படத்தின் ஹிந்தி போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த சவுக்கு சங்கர் தன் எக்ஸ் தளத்தில், “லியோ இசைவெளியீட்டு விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், அதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. காரணம், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் லியோ படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு பகுதி வெளியீட்டு உரிமையைக் கேட்டு இடையூறு செய்து வருகிறது.” என்கிற செய்தி ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

இதனைக் கண்ட லியோ தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ, “இந்தச் செய்தியில் உண்மையில்லை” என அதிரடியாக பதிலளித்துள்ளது.

வாரிசு படத்தின்போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கும் அப்படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூவுக்கும் வெளியீட்டு உரிமை தொடர்பான பிரச்னை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.