2006-ல் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்தார்.
குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா - 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.
இதையும் படிக்க: சிம்பு 48 படத்தில் கேஜிஎஃப் இசையமைப்பாளர்?
தற்போது, சில மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில், அவர் நடிப்பில் உருவான ‘குமாரி ஸ்ரீமதி’ தொடர் அமேசான் பிரைம் தளத்தில் செப்.28-ல் வெளியாகிறது.
இதையும் படிக்க: மைக்கேல் படத் தோல்விக்கு காரணம் இதுதான்: சந்தீப் கிஷன்
“தெலுங்கு சினிமாவில் எனக்கு இதுவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டேன். முக்கியமாக, தமிழ் ஹீரோ நடிகர் ஒருவர் என்னை படப்பிடிப்பில் துன்புறுத்தினார்” என நித்யாமேனன் கூறியதாக தகவல்கள் வெளியானது.
It's very sad that certain sections of journalism have come down to this. I urge you - Be Better than this! #stopfakenews @letscinema pic.twitter.com/zevdEPqTlL
â Nithya Menen (@MenenNithya) September 26, 2023
இந்நிலையில், இது முற்றிலும் பொய்யானதென நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார். மேலும் இது மாதிரி எந்த நேர்காணலும் தான் தரவில்லையெனவும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30.7.2026) 12 ராசிகளுக்கும்! வாய்ப்புகள் தேடிவரும் துலா ராசிக்கு!!

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 30) - இந்த ராசிக்கு லாபம்!
கரூா் மாவட்ட கோயில் நிலங்கள் பத்திரப் பதிவு விவகாரம்: தடை நீக்கத்துக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு





