நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்தப் படத்தில் அப்பா - மகன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும் மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
மேலும், இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ‘டாடா’ படத்தின் மூலம் பிரபலமடைந்த அபர்ணா தாஸ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: இணையத்தில் வைரலாகும் இறைவன் படத்தின் முன்னோட்டக் காட்சி!
இந்த நிலையில், இப்படத்தின் சண்டைப் பயிற்சியாளர்களாக அன்பறிவ் சகோதரர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவ் மாஸ்டர்கள் பீஸ்ட், லியோ ஆகிய படங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.