வெளியீட்டுக்கு முன்பே பல கோடிகளை அள்ளிய ஜீனி!

வெளியீட்டுக்கு முன்பே பல கோடிகளை அள்ளிய ஜீனி!

ஜீனி திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே பல கோடிகளை வசூல் செய்துள்ளது.
Published on

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

நடிகர் ஜெயம் ரவி தற்போது அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ’ஜீனி’ என்கிற ஃபேண்டசி படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நாயகிகளாக கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

வேல்ஸ் இண்டர்நெஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படமே ஜெயம் ரவியின் பெரிய படமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியீட்டுக்கு முன்பே பல கோடிகளை அள்ளிய ஜீனி!
கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள்...!

ஜீனி படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவுள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்தைய விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 'ஜீனி' திரைப்படம், திரையரங்க உரிமைகளை தவிர்த்து ஏற்கனவே ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com