12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

வரலட்சுமி சரத்குமாரின் சபரி: வெளியீட்டுத் தேதி!

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் சபரி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கபட்டுள்ளது.

Published On :

நடிகை வரலட்சுமி சரத்குமார் 'போடா போடி' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

இவர் வில்லி பாத்திரங்களிலும் இவர் நடித்து வருகிறார். இறுதியாக , இவர் நடித்த மைக்கல், யசோதா, ஹனுமான் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, தனுஷின் 50வது படமான ராயன் படத்திலும் வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகிறார்

முன்னதாக, இவருக்கு ஓவியம் மற்றும் கலைப்பொருள்களை விற்பனை செய்து வரும் தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் உடன் மும்பையில் மார்ச்.1ஆம் தேதி திருமண நிச்சயம் நிகழ்ந்தது.

இந்த நிலையில், வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அறிமுக இயக்குநர் அனில் இயக்கத்தில் வரலட்சுமி நடிக்கிறார்.

இப்படத்துக்கு சபரி எனப் பெயரிடப்பட்டுள்ளது. கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படம் மே 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம், மது நந்தன் ஆகியோர் பிரதான வேடத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.