ஒரே மாதிரியான தலித் சினிமாக்களை எடுக்காதீர்கள்: பா. ரஞ்சித் வேண்டுகோள்!

வருங்கால இயக்குநர்களுக்கு இயக்குநர் பா. ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரே மாதிரியான தலித் சினிமாக்களை எடுக்காதீர்கள்: பா. ரஞ்சித் வேண்டுகோள்!

தமிழ் சினிமாவில் இயக்குநர் பா. ரஞ்சித் வருகைக்குப் பிறகு தலித் சமூகத்தினரை முதன்மைப்படுத்தி பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது விகர்ம, பார்வதி, மாளவிகா நடிப்பில் தங்கலான் படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கிறது.

பா. ரஞ்சித் தயாரிப்பாளராகவும் நீலம் புரடக்‌ஷன்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதில் பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரைவால்’, ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.

ஒரே மாதிரியான தலித் சினிமாக்களை எடுக்காதீர்கள்: பா. ரஞ்சித் வேண்டுகோள்!
குடும்பம்தான் குற்றவாளிகளை உருவாக்குகிறது: இயக்குநர் ஜியோ பேபி

இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் பி.கே. ரோஸி எனும் பெயரில் திரைப்பட விழா கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகின்றன. இதில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசியதாவது:

தமிழ் சினிமா போன்ற மிகப் பெரிய ஊடகத்தில் தலித் சமூகத்தினரை பற்றி தவறுதலாகவே காட்டப்பட்டு வந்துள்ளது. அவர்களைப் பற்றி உண்மையை சினிமாவில் காட்ட விரும்பினேன். தற்போதுதான் தலித் சினிமாக்கள் தமிழில் வந்துகொண்டுள்ளன. அவர்களை கண்ணியமாக காட்டவேண்டும். அவர்களது உலகத்தின் மீது புதிய வெளிச்சத்தை பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியும்.

அவர்கள் பாதிகப்பட்டுகிறார்கள் என்ற ஒரே மாதிரியான சினிமாக்களை எடுக்க வேண்டும். தற்போது இதே மாதிரியான படங்கள் எடுத்தால் ஒரு தேக்கநிலை உருவாகிவிடும். இதிலிருந்து வருங்கால இயக்குநர்கள் விடுபட வேண்டும் எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com