மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

'அரண்மனை 4' படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.

Published On :

இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014இல் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்‌ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதன் வெற்றி காரணமாக, ’அரண்மனை - 2’ திரைப்படத்தை 2016இல் த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து இயக்கினார்.

பின்னர் இந்தப்படமும் வசூலைக் குவித்ததைத் தொடர்ந்து 2021-ல் ’அரண்மனை - 3’ எடுக்கப்பட்டது. இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, ’அரண்மனை 4’ படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, நடிகைகள் ராஷி கண்ணா, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் பாடலான ‘அச்சச்சோ’ பாடல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஏப். 14) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியிட உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மே.3ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

நல்ல விஷயங்கள் நேரமெடுக்கும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.