குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களின் முழு விவரம் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். இதற்கு காரணம் சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுகிறது.

சமையல் நன்கு தெரிந்த குக்குகள், சமையம் தெரியாத கோமாளிகளுடன் சேர்ந்து சமைக்கும்போது நடக்கும் கலாட்டாக்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த புதிய சீசனில் சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் நடுவர்களாக பங்கேற்கிறர்கள்.

குக் வித் கோமாளி 5-வது சீசனில் யூடியூபர் இர்ஃபான், நடிகர் விடிவி கனேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே, வசந்த் வசி, சுஜிதா, அக்‌ஷெய் கமல், திவ்யா துரைசாமி, பாடகி பூஜா, ஷெர்லின் சோயா உள்ளிட்டோர் குக்குகளாக பங்கேற்கவுள்ளனர்.

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!
'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

கடந்த சீசன்களில் கோமாளிகளாகப் பங்கேற்ற, புகழ், சுனிதா, குரேஷி, உள்ளிட்டோரும், புதிதாக, விஜய் டிவி புகழ் ராமர், ஷப்னம், அன்ஷிதா, சரத், வினோத் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், குக் வித் கோமாளி 5-வது சீசன் நிகழ்ச்சி, வரும் ஏப். 27 ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com