திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணத்தின்போது அணிந்த ஆடையை தற்போது வேறு மாதிரி மாற்றி அணிந்துள்ளார்.
திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் சென்றதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருந்த சமந்தா தற்போது நடிப்பில் கவனம் செலுத்துகிறார்.

கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!
நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த சமந்தா 2021-ல் விவாகரத்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது. நாகசைதன்யாவுடன் இந்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். தற்போது, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்த அன்று அணிந்திருந்த உடையை புதியதாக மாற்றியமைத்து அணிந்துள்ளார் சமந்தா.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நடிகை சமந்தா, “இன்று நான் அணிந்திருக்கும் ஆடை என்னுடைய பழைய உடையின் மாற்றியமைத்தது. எனது பழக்கவழக்கங்களை மாற்றுவதுபோல இந்த பழைய ஆடைகளை மாற்றி உடுத்திகொள்கிறேன். கவனித்து எடுக்கும் ஒவ்வொரு சிறிய முடிவும் வாழ்க்கையில் முக்கியமானது” எனக் கூறியுள்ளார்.

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!
சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com