சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

டோவினோ தாமஸின் நடிகர் டிரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

Published On :

தென்னிந்தியளவில் கவனம்பெற்ற நடிகராக இருப்பவர் டோவினோ தாமஸ். மாயநதி, மின்னல் முரளி, 2018, தள்ளுமலா உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.

தற்போது, நடிகர் லாலின் மகனும் இயக்குநருமான லால் ஜூனியர் (ஜீன் லால்) இயக்கத்தில் நடிகர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

முதலில் இப்படத்திற்கு நடிகர் திலகம் எனப் பெயரிட்டிருந்தனர். ஆனால், சில காரணங்களால் திலகத்தை நீக்கிவிட்டனர்.

சமீபத்தில், படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இன்று டிரைலர் வெளியாகியுள்ளது. சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து சூப்பர் ஸ்டாராகும் நடிகரின் வாழ்க்கை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்து வருவதால், இப்படமும் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.