ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகை மாளவிகா மோகனன் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகை மாளவிகா மோகனனின் அஞ்சலை தலையை பூடானில் வெளியிட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் மாளவிகா அறிமுகமானார். தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு மாளவிகா மோகனன் பதிலளித்திருக்கிறார்.

கேள்வி, பதில்:

_ நீங்கள் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்?

நான் பிறந்ததிலிருந்து இப்படித்தான்.

_ தங்கலான் படம் எப்போது வெளியாகும்? நீங்கள் டப்பிங் பேசிய அனுபவம் எப்படியிருந்தது?

எப்போது வெளியாகும் என எனக்கும் தெரியாது. நானே டப்பிங் பேசியது நல்ல அனுபவம். அதன் வரவேற்புக்காகக் காத்திருக்கிறேன்.

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!
காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

_ எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?

கேங்க்ஸ்டர். அதற்கான, சண்டைப் பயிற்சிகளை கொண்டு வருகிறேன்.

_ மாளவிகா, எப்போதாவது உங்கள் தொப்புளில் வளையம் போட்டுள்ளீர்களா?

நீங்கள் எதோ குழப்பமான கேள்வி, பதிலை எதிர்பார்க்கிறீர்கள். நான் அறிவார்ந்த வேடிக்கையான ஒன்றை எதிர்பார்க்கிறேன். நாம் இருவரும் தொடர்பில்லாத வேறுவேறு பக்கங்களில் இருக்கிறோம்.

_ எப்போது கல்யாணம்?

என் திருமணத்தைக் காண உங்களுக்கு ஏன் இந்த அவசரம்?

_ ஏன் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்கள் (போட்டோஷூட்)?

கவர்ச்சி எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com