நடிகர் சூரி நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த படம் 'கொட்டுக்காளி'.
நடிகர் சூரி நாயகனாக நடித்த இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக அன்னா பென் நடித்துள்ளார்.
பெர்லின் உள்ளிட்ட சில சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. திரையரங்க வெளியீடாக இப்படம் வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
சிறப்புத் திரையிடலில் கொட்டுக்காளி படத்தைப் பார்த்த பல இயக்குநர்கள் பாராட்டி வருகின்றனர். முக்கியமாக, ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், ‘கொட்டுக்காளி ஒரு மாஸ்டர்பீஸ்’ எனப் புகழ்ந்துள்ளார்.
வெளியீட்டிற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் டிரைலரை நாளை (ஆக.13) காலை 11 மணிக்கு வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.