கங்கனாவை வெறுக்கலாம், ஆனால் திறமையை மறுக்க முடியாது..! பாராட்டு மழையில் எமர்ஜென்சி டிரைலர்!

நடிகை கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்படம்: எமர்ஜென்சி டிரைலர் / யூடியூப்
Published on
Updated on
1 min read

பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத்.

2006-ஆம் ஆண்டு வெளியான அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனா ரனாவத் தனது சிறப்பான நடிப்பினால் இதுவரை 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

2019இல் ‘மணிகர்னிகா- ஜான்சி ராணி’ படத்தினை கிறிஸ் ஜகர்லாமுடி உடன் இணைந்து இயக்கியுள்ளார். தற்போது எமர்ஜென்சி படத்தினை முழுக்க முழுக்க அவரே இயக்கியுள்ளார்.

கங்கனா ரணாவத்
கோட் டிரைலர் அறிவிப்பில் தாமதம்! புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளப் படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத், அவரே இந்தப் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார்.

ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதன் டிரைலர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

dinmani online
கங்கனா ரணாவத்
3 கான்களையும் ஒரே படத்தில் இயக்க கங்கனா ரணாவத் விருப்பம்!

ரசிகர்கள் யூடியூப்பில் கங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். “ நீங்கள் கங்கனா ரணாவத்தை வெறுக்கலாம் ஆனால் அவரது திறமையை மறுக்க முடியாது. 5 ஆவது தேசிய விருதுக்கு தயார்” என பலரும் நேர்மறையான (பாசிட்டிவ்) கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

dinmani online

உலகம் முழுவதும் வரும் செப்.6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com