நடிகை அனிதா சம்பத் பகிர்ந்த உணர்ச்சிபூர்வமான பதிவு!

நடிகை அனிதா சம்பத் தனக்கு இருக்கும் மன உளைச்சல் குறித்து பதிவிட்டுள்ளார்.
அனிதா சம்பத்
அனிதா சம்பத்படம்: இன்ஸ்டா / அனிதா சம்பத்.
Published on
Updated on
2 min read

செய்தி வாசிப்பாளரும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமான அனிதா சம்பத், பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

காலா, சர்க்கார், தர்பார் என பெரிய படங்களில் நடித்துள்ளார். தற்போது படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

அலுவலக நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் சொந்த வீடு வாங்கியது குறித்து நெகிழ்ச்சியாக எழுதியிருந்தார்.

கணவருடன் அனிதா சம்பத்.
கணவருடன் அனிதா சம்பத்.

தற்போது இன்ஸ்டாகிராமில் புதிய பதிவினைப் பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு இருக்கும் பதட்டம், மன உளைச்சல் குறித்து பதிவிட்டுள்ளார். அதிலிருந்து எப்படி வெளிவருகிறேன் என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார்.

அனிதா சம்பத்
மூலகாரணத்தை அழிக்காமல் எதுவும் மாறப்போவதில்லை..! ஆலியா பட் வேதனை!

இதில் அனிதா சம்பத் கூறியதாவது:

புதியதாக ஒரு விஷயம் சமீபமாக படிக்கும் உளவியல் படிப்பில் கற்றுக்கொண்டேன். அதை சிஸ்டெமிக் டீசென்சிடிசேஷன் என்பார்கள். அதாவது உணர்வு நீக்க சிகிச்சை என்பார்கள்.
எந்த விஷயத்துக்கு நாம் அதிகம் பயப்படுகிறோமோ, அல்லது ஆகுகிறோமோ அதே விஷயத்த கொஞ்சம் கொஞ்சமாக பழகுவதன் மூலமாக அதிலிருந்து வெளிய வரமுடியும் என்கிறார்கள். இதை ஒரு உளவியல் சிகிச்சையாகவே மருத்துவர்கள் செய்து வருகிறார்கள். ( அல்லு அர்ஜுன் படத்தில் நாயகி தீயை பார்த்தாலே பயப்படுவார்).

எனக்கு நானே தரும் சிகிச்சையாக இந்த ஹைதராபாத்தை நினைத்துக்கொண்டேன்.

எனது அப்பா, சாய் பாபா கோயிலுக்கு சென்று ரயிலில் திரும்பி ஆந்திர மாநிலம் கடக்கும்போதுதான் அப்படியானது. அதிலிருந்து தெலுங்கு, ஆந்திரா இது சம்பந்தமாக எதைப் பார்த்தாலும் எனக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்.

எல்லா ஊருக்கும் பயணிக்கும் நான் இங்கு மட்டும் போகமாட்டேன். ஹைதராபாத்தில் (தற்போது தெலங்கானா) படப்பிடிப்பு நடைபெறுமென முன்பே தெரியாது. இதை ஒரு சிகிச்சையாக எடுத்துக்கொண்டேன்.

வேலை பளு அதிகமாக இருந்தததால் என்னால் வேறு எதையும் சிந்திக்க விடாமல் இருந்தது. தற்போது ஆந்திரம் எனக்கு பழகியதும் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

அப்பாவின் காரியத்தன்று அப்பாவின் புகைப்படம் மீது ஒரு பட்டாம்பூச்சி நீண்ட நேரமாக உட்கார்ந்திருந்தது. அப்பா ஒரு எழுத்தாளர். அவருடைய புத்தகங்கள் மீது நீண்ட நேரம் இருந்தது. அன்றிலிருந்து அதை அப்பாவகவே நினைத்தேன்.

அனிதா சம்பத்
வதந்திகளுக்கு பதிலளித்த மிருணாள் தாக்குர்!

அப்பாவை மிஸ் செய்யும்போது, அவரை நினைத்தாலோ அல்லது அவருக்கு பிடித்த இடத்துக்கு சென்றாலோ அந்தப் பட்டாம்பூச்சி வரும்.

ஆந்திரத்தில்தான் அப்பாவை இழந்தேன். இந்தப் புகைப்படம் எடுக்கும்போதும் என் பக்கத்தில் ஒரு பட்டாம்பூச்சி வந்தது. அது என்னிடம் ”என்ன அம்மு என்னைத் தேடி வந்தியா” என்று கேட்ட மாதிரி இருந்தது.

இன்னமும் ரயில் சத்தம் ,ரயில் புகைப்படம், ரயில் காட்சிகள் வந்தால் எனக்கு பயமும் நடுக்கமும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அந்த மாதிரி காட்சிகள் வந்தால் ஓடிவிடுவேன். அதிலிருந்து இன்னும் முழுமையாக மீண்டு வர முடியவில்லை. மெதுவாக மீண்டு வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் அனிதா சம்பத்துக்கு ஆறுதலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com