
பாலிவுட் நடிகை ரிதி தோக்ரா பாலியல் வன்கொடுமை தேசிய பிரச்னை ஆகாதவரை பெண்களுக்கு சுதந்திரமில்லை எனக் கூறியுள்ளார்.
தில்லியைச் சேர்ந்தவர் நடிகை ரிதி தோக்ரா. உளவியல் படித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் சினிமாவிலும் இணையத்தொடர்களிலும் நடித்துள்ளார்.
மிகவும் பிரபலமான அசுர் இணையத்தொடரில் அறிமுகமானார். ஜவான் படத்திலும் நடித்துள்ளார். ஆசாத்தின் (இளம் ஷாருக்கான்) வளர்ப்பு தாயாக நடித்தவர்தான் ரிதி தோக்ரா.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த வாரம் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இது குறித்து பலரும் பதிவிட்டு வரும் வேளையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாஜக அமைச்சர்களையும், மம்தா பானர்ஜி, பிரதமரையும் டேக் செய்து, “ பாலியல் வன்கொடுமை தேசிய பிரச்னை ஆகாதவரை பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரமில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இவருக்கு உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.