
2022 ஆம் ஆண்டின் சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த படமாக, மலையாள படமான ஆட்டம் படம் தேர்வாகியுள்ளது.
சிறந்த தமிழ் படமாக, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 தேர்வாகியுள்ளது.
சமூகம், சுற்றுச்சூழல் மதிப்புகளை விளக்கும் சிறந்த படமாக, குஜராத்தி படமான கட்ச் எக்ஸ்பிரஸ் படம் தேர்வாகியுள்ளது.
சிறந்த பொழுதுபோக்கு படமாக, கன்னட படமான காந்தாரா தேர்வாகியுள்ளது.
சிறந்த இயக்குநராக, இந்தி படமான உஞ்சை படத்தின் சூரஜ் ஆர். பர்ஜத்யா தேர்வாகியுள்ளார்.
சிறந்த புதுமுக இயக்குநராக, ஹரியாண்வி மொழி படமான ஃபௌஜா படத்தின் பிரமோத் குமார் தேர்வாகியுள்ளார்.
சிறந்த நடிகராக, கன்னட படமான காந்தாரா பட இயக்குநரும், படத்தின் கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டி தேர்வாகியுள்ளார்.
சிறந்த நடிகையாக, திருச்சிற்றம்பலத்தில் நடித்த நித்யா மேனனும், குஜராத்தி படமான கட்ச் எக்ஸ்பிரஸ் படத்தின் மான்ஸி பரீக்குக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகையாக, இந்தி படமான உஞ்சை படத்தின் நீனா குப்தா தேர்வாகியுள்ளார்.
சிறந்த துணை நடிகராக, ஹரியாணா படமான ஃபௌஜா படத்தின் பவன் ராஜ் மல்ஹோத்ரா தேர்வாகியுள்ளார்.
சிறந்த குழந்தை நட்சத்திரமாக, மலையாள படமான மாளிகாபுரம் படத்தின் ஸ்ரீபத் தேர்வாகியுள்ளார்.
சிறந்த திரைக்கதைக்காக, மலையாள படமான ஆட்டம் படத்தின் ஆனந்த் ஏகார்ஷி தேர்வாகியுள்ளார்.
சிறந்த வசனத்துக்காக, இந்தி படமான குல்மோஹர் படத்தின் அர்பிதா முகர்ஜி, ராகுல் வி சிதெல்லா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
சிறந்த சண்டைக் கலைக்காக, கன்னட படமான கேஜிஎஃப் - சாப்டர் 2 படத்தின் சண்டைக் கலை இயக்குநர் அன்பறிவ் தேசிய விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிறந்த நடனத்திற்காக, தமிழ் படமான திருச்சிற்றம்பலம் படத்தின் `மேகம் கருக்காதா’ பாடலுக்காக நடன இயக்குநர்கள் ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பாடலாசிரியராக, ஹரியாண்வி படமான ஃபௌஜா படத்தின் நௌசத் சதார் கான் தேர்வாகியுள்ளார்.
சிறந்த பின்னணி பாடகராக பெண்கள் பிரிவில், மலையாள படமான சௌதி வெல்லக்கா சிசி.225/2009 படத்தின் பாம்பே ஜெயஸ்ரீ தேர்வாகியுள்ளார்.
சிறந்த பின்னணி பாடகராக ஆண்கள் பிரிவில், இந்தி படமான பிரம்மாஸ்திரா படத்தின் அர்ஜித் சிங்குக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இசைக்காக, இந்தி படமான பிரம்மாஸ்திரா படத்தின் இசையமைப்பாளர் பிரிதம் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிறந்த பின்னணி இசைக்காக, தமிழ் படமான பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இசை வடிவமைப்பாளருக்காக, தமிழ் படமான பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் இசை வடிவமைப்பாளர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒளிப்பதிவாளராக, தமிழ் படமான பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தேசிய விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிறந்த ஒப்பனைக்காக, வங்கமொழி படமான அபராஜிதோ படத்தின் ஒப்பனைக் கலைஞர் சோம்நாத் குண்டுவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஆடை வடிவமைப்பாளராக, குஜராத்தி படமான குட்ச் எக்ஸ்பிரஸ் படத்தின் நிகி ஜோஷி தேர்வாகியுள்ளார்.
சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக, வங்கமொழி படமான அபராஜிதோ படத்தின் வடிவமைப்பாளர் ஆனந்தா அதியா தேர்வாகியுள்ளார்.
சிறந்த படத் தொகுப்பாளராக, மலையாள படமான ஆட்டம் படத்தின் தொகுப்பாளர் மகேஷ் புவனேந்த் தேர்வாகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.