
துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், சுமந்த் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகிய சீதா ராமம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றிப்பட இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில்தான் பிரபாஸ் நடிக்கவிருக்கிறார்.
இதன் பூஜை தொடங்கி படப்பிடிப்பு துவங்கியுள்ளதை பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது.
பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது தி ராஜ் சாப் படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்து அனிமல் பட இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறியிருந்த நிலையில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இது குறித்து இயக்குநர் ஹனு ராகவபுடி, “இன்னொரு அற்புதமான படம். மிகவும் முக்கியமான மனிதர்களுடன் மறக்க முடியாத பயணம்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.