நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன் 48வது படத்தில் நடிக்க உள்ளார்.
ஆனால், அப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால், சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளார்.
பான் இந்திய படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு ரூ.100 கோடி பட்ஜெட் ஆகுமெனவும் இதனால் தீபிகா படுகோன் அல்லது மிருணால் தாக்குர் நடித்தால் நன்றாக இருக்குமெனவும் படக்குழு விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் சிம்பு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். ஸ்டைலாக இருக்கும் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
தங்கலான் படத்தில் கலை இயக்குநர் எஸ்.எஸ். மூர்த்திக்கு பாராட்டு குவிந்துவரும் நிலையில் நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாவது:
சிம்புவின் 48 ஆவது படம் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். அதுவும் பாகுபலி மாதிரியான வரலாற்று படமே. இந்தப் படம் எப்படியிருக்குமென்றால் ராஜமௌலி, சஞ்சய் லீலா பன்சாலி இணைந்து இயக்குவது போலிருக்கும். அடுத்து ப்ளூ ஸ்டார் இயக்குநர் படத்திலும் பணியாற்றுகிறேன் எனக் கூறினார்.