
தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகளுல் ஒருவர் சிரஞ்சீவி. 2002இல் பி.கோபாலன் இயக்கத்தில் வெளியான இந்திர (தமிழில் இந்திரன்) திரைப்படம் தற்போது மறுவெளியீடாகியுள்ளது.
இந்தப் படத்தில் ஆர்த்தி அகர்வால், சோனாலி நடித்துள்ளார்கள். இந்தப்படம் வெளியானபோதே ரூ.50 கோடி வசூலித்ததாகவும் தென்னிந்தியாவில் அதிகம் வசூலித்த படையப்பாவின் வசூலை மிஞ்சியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், தமிழகம் உள்பட 385க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிள்ளது.
வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
சிரஞ்சீவியின் சமீபித்திய திரைப்படங்கள் சரியாக வசூலீட்டாத நிலையில் இந்தப் பழைய படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.