சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகர் விமல், பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். களவானி திரைப்படம் இவரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்து படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த விலங்கு இணையத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது புதிய இணையத் தொடர் ஒன்றிலும் சார் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் நடிகர் விமல் நடித்து முடித்துள்ள திரைப்படம்தான் 'போகுமிடம் வெகு தூரமில்லை'. இப்படத்தில் கருணாஸ், நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.
அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மாறுபட்ட கதைக்களத்தில், மனதை உருக வைக்கும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக உருவாகியுள்ளது போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படம்.
இந்தப் படம் நாளை (ஆக.23) வெளியாகவுள்ளது. முதல்நாள் மட்டும் இந்தப் படத்தின் டிக்கெட் அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு இலவசம் என படக்குழு அறிவித்துள்ளது.
தங்களது அடையாள அட்டையை 9884849790 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பினால் இலவச டிக்கெட்டினை பெற்றுக்கொள்ளலான் என படக்குழு கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.