சூர்யாவின் சனிக்கிழமை போஸ்டர்.
சூர்யாவின் சனிக்கிழமை போஸ்டர்.

நானியின் சூர்யாவின் சனிக்கிழமை: தணிக்கைச் சான்றிதழ்!

நடிகர் நானி நடிப்பில் உருவாகும் சரிபோத சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.
Published on

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான 'தசரா' கலவையான விமர்சனங்களை பெற்றன.

நானியின் 30வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார்.

31ஆவது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார். அடடே சுந்தரா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றதால் இந்தக்கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூர்யாவின் சனிக்கிழமை போஸ்டர்.
கொட்டுக்காளி படக்குழுவினரை குடும்பமாக நினைத்து அன்னா பென் உருக்கம்!

டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘சரிபோத சனிவாரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் சூர்யாவின் சனிக்கிழமை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் பிரியங்கா மோகன் நாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் யு/ஏ கொடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆக.29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்