பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் முகேஷை கைது செய்ய நீதிமன்றம் தடை

நடிகர் முகேஷை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்தது பற்றி...
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ்
Published on
Updated on
1 min read

நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நடிகையின் குற்றச்சாட்டை தொடர்ந்து, கேரள போலீஸார் ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் முகேஷ் மீது இன்று காலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தன்னை கைது செய்வதற்கு தடை கோரி எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றத்தில் முகேஷ் மனு அளித்திருந்த நிலையில், 5 நாள்கள் அவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்யக் கோரி நடிகர் முகேஷுக்கு எதிராக கேரள காங்கிரஸினர் இன்று காலை முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ்
மல்லுவுட் பாலியல் குற்றச்சாட்டுகள்: பட்டியலில் தமிழ் நடிகர்கள்?

‘ஹேமா குழு’ அறிக்கையின் தொடா்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களை மலையாள திரையுலகைச் சோ்ந்த பெண்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட 4 முக்கிய மலையாள நடிகா்கள் மீது நடிகையொருவா் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறாா்.

இதனைத் தொடர்ந்து, முகேஷ் திரைப்படக் கொள்கை வகுப்புதற்கான கேரள அரசின் குழுவில் இருந்து நீக்கம் செய்து புதன்கிழமை மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

தொடர்ச்சியாக, பாலியல் புகார் அளித்த நடிகையிடம் கேரள அரசு அமைத்த 7 போ் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி இன்று காலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, ரியாஸ் கான் உள்பட இதுவரை 17 பேர் மீது பாலியல் புகார்களை நடிகைகள் அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com