நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் ரூ.100 கோடி வரை வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரது இயக்கத்தில் அடுத்த படமாக ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் தயாராகியுள்ளது.
தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
படத்தின் முதல் பாடலான ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடலைப் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
தனுஷ், அறிவு, சுபலாஷினி, ஜி.வி.பிரகாஷ் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலை அறிவு எழுதியுள்ளார்.
நடிகை பிரியங்கா மோகன் சிறப்புத் தோற்றத்தில் இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.