சுந்தரி தொடர் நிறைவு! நடிகை கேப்ரியல்லா உருக்கம்!

சுந்தரி தொடர் 1145 நாள்கள் ஒளிபரப்பாகியுள்ளது.
Actress gabrella
கேப்ரியல்லாஇன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி தொடர் நிறைவு பெற்றது. இந்தத் தொடர் 1145 நாள்கள் ஒளிபரப்பாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் அதிக நாள்கள் டிஆர்பி பட்டியலில் முதன்மை இடத்தில் இருந்த தொடர்களில் சுந்தரி தொடரும் ஒன்றாக உள்ளது.

இந்தத் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 1) ஒருமணிநேர சிறப்புக் காட்சியாக இறுதிக்கட்டம் ஒளிபரப்பானது. அத்துடன் சுந்தரி தொடர் நிறைவு பெற்றது.

இதனால், ரசிகர்கள் பலர் இந்தத் தொடரில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் 2021 பிப்ரவரி முதல் ஒளிபரப்பான சுந்தரி தொடர் 2024 டிசம்பர் தொடக்கத்தில் நிறைவு பெற்றது. இந்தத் தொடரில் நடிகை கேப்ரியல்லா முதன்மை பாத்திரத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக ஜிஷ்னு மேனனும், முக்கிய பாத்திரத்தில் ஸ்ரீகோபிகாவும் நடித்தனர்.

சுந்தரி தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பானது.

கிராமத்தில் பிறந்த பெண், திருமணத்துக்குப் பிறகு கணவனால் ஏமாற்றப்பட்ட நிலையில், துவண்டுவிடாமல் கல்வி கற்று சமுதாயத்தில் முன்னேறுவதே சுந்தரி தொடரின் கதை.

கிராமத்துப் பெண்ணான சுந்தரி படிக்காததால், அவரின் கணவர் படித்த வேறொரு பணக்கார பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். தன் கணவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் வீட்டில் பணிபுரிந்துகொண்டே படித்து ஆட்சியராவார் சுந்தரி. இதுவே இத்தொடரின் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.

பல புதிய தொடர்கள் வந்தாலும், விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பாகிவந்த சுந்தரி தொடர் 1145 எபிஸோடுகளுடன் நிறைவு பெற்றது.

இது குறித்து ரசிகர்களுக்கு பதிவிட்டுள்ள நடிகை கேப்ரியல்லா, ''என்னோட கலை துறைல எனக்குனு இடம் குடுத்து அழகு பாத்த என்னோட மக்களுக்கு அடி மனசுல இருந்து நன்றி சொல்றேன். இப்படிக்கு சுந்தரியாகிய கேபி'' எனப் பதிவிட்டுள்ளார்.

சுந்தரி தொடர் மிகவும் உருக்கமானத் தொடர் என்றும், ரசிகர்கள் மனதில் என்றென்றும் இது நிலைத்திருக்கும் எனவும் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com