இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
நடிகர் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று(டிச.5) வெளியானது.
நடிகை ஆலியா பட் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான ஜிக்ரா படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை(டிச. 6) வெளியாகிறது.
வருண் தேஜா - மீனாட்சி செளத்ரி நடிப்பில் வெளியான மட்கா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: முதலிடத்தை பிடித்த புதிய தொடர்: இந்த வார டிஆர்பி!
பிறமொழி திரைப்படங்களான மட்கா மற்றும் அக்னி அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.
இப்படங்களைதவிர, முன்னதாக ஓடிடியில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸிலும், பிரதர் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்திலும், பிளடி பெக்கர் பெக்கர் திரைப்படம் சிம்பிளி செளத் ஓடிடியிலும் பார்க்கலாம்.
அந்தகன் திரைப்படத்தை அமேசான் பிரைமிலும், விக்ராந்த் - ரித்விகா நடிப்பில் உருவாகியுள்ள தீபாவளி போனஸ் திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடியில் காணலாம்.