விடுதலை - 2 படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!

விடுதலை - 2 சென்சார் குறித்து...
விடுதலை - 2 படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!
Published on
Updated on
1 min read

விடுதலை - 2 திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை - 2 திரைப்படம் டிச. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதில் விஜய் சேதுபதி - மஞ்சு வாரியருக்கு இடையேயான காதல் காட்சிகள் இருக்கின்றன. மேலும், திட்டமிட்ட கதையை மாற்றி நீண்ட நாள்கள் படப்பிடிப்பை மேற்கொண்டனர்.

இளையராஜா எழுதி இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான ’தெனந்தெனமும்..’ பாடல் ரசிகர்களிடம் கவனம் பெற்றது.

இந்த நிலையில், தணிக்கை வாரியம் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை முதல் பாகத்திற்கும் ஏ சான்றிதழ் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com