பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காலையில் வெளியாகும் சூர்யா 44 படத்தலைப்பு டீசர்!

சூர்யா-44 தலைப்பு டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2024, 2:09 pm

DIN

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா-44 படத்தின் தலைப்புக்கான டீசர் நாளை (டிச.25) காலை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கும், சூர்யா 44 படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமானது. தொடர்ந்து, ஊட்டி, கேரளத்தில் நடைபெற்று முழுமையாக முடிவடைந்தது.

நீண்ட நாள்களாவே படத்தின் பெயரை அறிவிக்காமல் சூர்யா - 44 என்றே அழைக்கப்பட்டு வந்தது.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்திற்கான தலைப்பு டீசர் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக காலை 11 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யாவின் கங்குவா எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை அதனால் இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.