நடிகர் ஆதியுடன் லட்சுமி மேனன் நடித்துள்ள சப்தம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரம், வல்லினம், குற்றம் 23 திரைப்படங்களை இயக்கி பிரபலமான அறிவழகன் சப்தம் எனும் படத்தை இயக்கியுள்ளார். இதில் தனது முதல்பட நாயகனான ஆதியுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். நாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.
ஆல்பா பிரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து சப்தம் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
மேலும், இப்படத்தில் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டுக்காக காத்திருந்தது.
இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் படம் வரும் பிப்.28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை லட்சுமி மேனனுக்கு இந்தப்படம் திருப்புமுனையை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









