தமிழ் சினிமா 2024

தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது.
தமிழ் சினிமா 2024
Updated on
2 min read

ஜனவரி

6: தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டனர்.

மே

1: 80 -களின் தமிழ் சினிமாவில் பல மனதை மயக்கும் பாடல்களைப் பாடி தன் தனித்துவக் குரலால் ரசிகர்களைக் கவர்ந்த பாடகி உமா ரமணன் காலமானார்.

2: பிரபல நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் சினிமா பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக 100 நிமிடங்கள் 100 பிரபுதேவா பாடல் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குழந்தைகள் வெயில் தாக்கத்தில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

4: இளையராஜா காப்புரிமை நோட்டீஸ் அளித்த விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.

16: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசின் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

4: பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்.

பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

16: நடிகர் சித்தார்த் - நடிகை அதிதி ராவ் திருமணம் நடைபெற்றது.

17: பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா பெங்களூரில் காலமானார்.

22: தான் முறைப்படி அனுமதி வாங்கியுள்ள 'வேள்பாரி' நாவலின் காட்சிகளை மற்ற படங்களில் இணைப்பது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை விடுத்தார்.

நவம்பர்

15: நயன்தாரா தனது ஆவணப்படமான 'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல்' தயாரிப்பதைத் தடுத்ததாகக் குற்றம் சாட்டி நடிகர் தனுஷூக்கு எதிராக சர்ச்சை நோட்டீஸை விடுத்தார்.

16: நடிகர் தனுஷ் மீதான தனது விரக்தியை பகிரங்கமாக ஒரு நீண்ட திறந்த கடிதத்தில் வெளிப்படுத்தினார் நயன்தாரா.

19: ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் அவரின் மனைவி சாய்ரா பானு இருவரும் பிரிந்ததாக ஊடகங்களுக்கு அறிவித்தனர்.

20: 350 கோடி ரூபாய் பெரிய பட்ஜெட்டில் உருவான, சூர்யாவின் 'கங்குவா', வெளியான ஐந்து நாள்களில் உலகளவில் 85.5 கோடி ரூபாய் வசூல் செய்து, 100 கோடி ரூபாய் வசூலை எட்டியது.

20: 350 கோடி பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கமலின் 'இந்தியன் 2' உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடி மட்டுமே வசூலித்தது.

27: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.

டிசம்பர்

4: ஹைதராபாதில் 'புஷ்பா 2' திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தார்

6: தேசிய விருது பெற்ற ' குடிசை' இயக்குநர் ஜெயபாரதி காலமானார்.

'புஷ்பா 2' பீரிமியர் காட்சியின் போது நெரிசலில் பெண் உயிரிழப்பு சம்பவத்தால் காலை காட்சிகளுக்கு தடை விதித்தது தெலங்கானா அரசு.

10: விஜய்சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம் சீன திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது.

11: அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளில் உச்சமாக ரூ. 1000 கோடியைத் தொட்டது. இது இந்தியத் திரைப்படங்களில் இதுவரை இல்லாத வேகமானதாகும். அதாவது ஒரே வார சாதனை.

12: தமிழ், தெலுங்கு, மலையாளம், தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து முன்னணி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் அந்தோனி தட்டில் என்பவரை மணந்தார்.

20: திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் ராஜ் கபூரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். பிரதமரை கபூர் குடும்பத்தினர் சந்தித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com