குக் வித் கோமாளி சீசன் 5-இல் நான் இருக்கிறேனா? ரவீனா பதில்!

பிக் பாஸ் சீசன் 7-இல் பங்கேற்ற நடிகை ரவீனா இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
ரவீனா தாஹா
ரவீனா தாஹா

பிக் பாஸ் சீசன் 7-இல் பங்கேற்ற நடிகை ரவீனா இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

நடிகை ரவீனா தாஹா ஜில்லா, புலி, ராட்ச்சன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து சின்னத்திரைக்குள் களமிறங்கினார். சன் டிவியில் தங்கம் தொடரில் நடித்த ரவீனா, தொடர்ந்து ஜீ தமிழ் சேனலில் பூவே பூச்சூடுவா தொடரில் நடித்தார்.

பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான மெளனராகம்  2-ல் பிரதான பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கெடுத்தார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 7-ல் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் 91 நாள்கள் வரை இருந்து, பின்னர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் வெளியேறினார்.

இந்த நிலையில், நடிகை ரவீனா தாஹா இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் குக் வித் கோமாளி சீசன் 5-இல் நீங்கள் கலந்து கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு ரவீனா," இந்நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வேனா என்று எனக்கு தெரியவில்லை".

"இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான அழைப்பு இதுவரை எனக்கு வரவில்லை. நான் ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். அதனால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று நினைக்கிறேன்" என்று பதில் அளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com