கோட் செல்ஃபி.. வெங்கட் பிரபு பகிர்ந்த விடியோ!

நடிகர் விஜய் கோட் படப்பிடிப்பில் தன் ரசிகர்களைச் சந்தித்த விடியோவை வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.
கோட் செல்ஃபி.. வெங்கட் பிரபு பகிர்ந்த விடியோ!

அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்கிற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நடிகர் விஜய், சினிமாவிலிருந்தும் விலகுவதாக அறிவித்தது அவருடைய ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக வெற்றி கழகம் என்கிற தன் கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் விஜய், தற்போது நடித்துக்கொண்டிருக்கும் கோட் மற்றும் நடிக்கவிருக்கும் விஜய் - 69 படத்தோடு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதை அறிவித்துள்ளார். 

விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில், விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்குவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில், கோட் படப்பிடிப்பில் விஜய் தன் ரசிகர்களைச் சந்தித்து எடுத்துக்கொண்ட செல்ஃபி விடியோ இணையத்தில் வைரலானது. தற்போது, விஜய் செல்ஃபி எடுப்பதை விடியோவாக எடுத்து பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com